FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கலீதாவுக்கு 6 மாத ஜாமீன்

தீவைப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது.பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக, கலீதா ஜியாவி

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 12:55 am IST
பகிர்:


தீவைப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக, கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி கடந்த 2015-ஆம் ஆண்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது நடத்தப்பட்ட வன்முறை, பேருந்து தீவைப்புச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, கலீதா மீது நடைபெற்ற வழக்கில் அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏகேஎம் அஸாதுஸமான் மற்றும் எம்.எஸ். முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் உத்தரவிட்டனர். 
ஏற்கெனவே, அறக்கட்டளை ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments