FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிரியாவில் இருக்கும் படைகளை வாபஸ் பெற அமெரிக்கா திட்டம்

சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினர் முழுவதையும் வாபஸ் பெறுவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினர் முழுவதையும் வாபஸ் பெறுவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆஸாத்துக்கு ஆதரவான படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடைபெற்று வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் கூட்டு படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுச் சண்டையில், குர்து இன போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் 2,000 வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுட்டுரையில் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு மட்டுமே, அமெரிக்க படையினரை அனுப்பினேன். அதன்படி, ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்கா தோற்கடித்து விட்டது என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர், சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப் பெறப்பட இருக்கின்றனர். இதுதொடர்பான முடிவு செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்பட்டது என்றார். அதேநேரத்தில், அமெரிக்க படையினர் திரும்பப் பெறப்பட இருக்கும் கால அளவு எதையும் அவர் வெளியிடவில்லை.
சிரியாவில் குர்து போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்க படையினர் சண்டையிட்டு வந்தனர். இந்த குர்து இன போராளிகளை துருக்கி நாடு, பயங்கரவாதிகள் எனத் தெரிவித்து வருகிறது. குர்து போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சிரியாவில் இருந்து அமெரிக்க படையினர் முழுவதையும் வாபஸ் பெறுவதற்கு டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குர்து போராளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments