FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வட கொரியாவுக்கான பயணத் தடையை தளர்த்தும் பரிசீலனையில் அமெரிக்கா

வட கொரியா மீதான பயணத் தடையை தளர்த்துவது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, வட கொரியாவுக்கான அந்நாட்டு சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வட கொரியா மீதான பயணத் தடையை தளர்த்துவது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, வட கொரியாவுக்கான அந்நாட்டு சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் தெரிவித்தார்.
அமெரிக்கா, தங்கள் மீதான தடையுத்தரவுகளை தளர்த்தாத பட்சத்தில், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப்போவதில்லை என்று வட கொரியா கூறியிருந்த நிலையில், அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது.
அணு ஆயுத சோதனை விவகாரத்தால் ஏற்பட்ட சுணக்கத்தை சரிசெய்யும் முயற்சியாக, வட கொரியாவுக்கு மனிதநேய அடிப்படையிலான போக்குவரத்தை அனுமதிப்பதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து வருவதாக ஸ்டீபன் பீகன் கூறினார். இதுதொடர்பாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க உதவிக் குழுக்களுடன் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
அணு ஆயுதங்கள் தொடர்பாக தென் கொரிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்காக புதன்கிழமை அந்நாட்டுக்கு வந்த ஸ்டீபன் பீகன் இதனை தெரிவித்தார். 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையே கடந்த ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஸ்டீபன் பீகன்-தென் கொரிய அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
வட கொரியாவுடனான 70 ஆண்டு விரோதப் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது, அந்நாட்டுடனான உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய முயற்சிகளில் எவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்றுவது என தென் கொரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக ஸ்டீபன் பீகன் கூறினார். அமெரிக்கா கடந்த ஆண்டு செப்டம்பரில் வட கொரியா மீது பயணத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments