பாகிஸ்தான்: படை விமான விபத்து: இரு விமானிகள் பலி
பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் பெஷாவர், விமான தளத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்
பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் பெஷாவர், விமான தளத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்டி-7பிஜி ரகத்தைச் சேர்ந்த அந்த பயிற்சி விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த பயிற்சி விமான விபத்தும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.