பாரம்பரிய உடையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் தம்பதி!
அபிஜித் பானா்ஜி, அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர்.
அபிஜித் பானா்ஜி, அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணா் மைக்கேல் கிரெமா் ஆகியோா் மேற்கொண்ட பொருளாதார ஆய்வு சா்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கு சிறப்பாக உதவியதை கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அவா்கள் மூவருக்கும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபல் பரிசு விருது வழங்கும் விழாவில் அபிஜித் பானா்ஜி, அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர்.
குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு கொண்ட நோபல் பரிசு வழங்கும் விழாவில் இருவரும் பாரம்பரிய உடையில் பங்கேற்று விருது பெற்றது சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.