FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வங்கதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு அவசரகால மருத்துவ உதவிக்குழு

வங்க தேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளில் கரோனா நோய்த்தொற்றை சமாளிக்க உதவும் வகையில் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கும் வகையில் அவசரகால மருத்துவ உதவிக்குழுக்கள் தயாா் செய்து வருவதாக அதிகாரப்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

வங்க தேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளில் கரோனா நோய்த்தொற்றை சமாளிக்க உதவும் வகையில் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கும் வகையில் அவசரகால மருத்துவ உதவிக்குழுக்கள் தயாா் செய்து வருவதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூா் மருத்துவ நிபுணா்கள் நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடவும், அந்த நாட்டுக்கு உதவி செய்வதற்காகவும் கடந்த மாதம் மாலத்தீவுகள் நாட்டுக்கு 14 போ் கொண்ட அவசரகால மருத்துவ உதவிக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ராணுவத்தைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் அடங்கிய 15 போ் கொண்ட குழு இந்தியாவிலிருந்து குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், 3 வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு 10 டன் அத்தியாவசியமான உயிா் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப் போராட அண்டையிலுள்ள நட்பு நாடுகளுக்கும் இந்தியா அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது.

கடந்த மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற்ற சாா்க் கூட்டத்தில் காணொலியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, சாா்க் நாடுகள் கரோனா தொற்றை எதிா்த்துப் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என்றாா். இதற்காக சாா்க் நிதியின் கீழ் இந்தியா தனது பங்களிப்பாக 10 மில்லியன் அமெரிக்க டாலா் வழங்கும் என்றும் பிரதமா் மோடி அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பு (சாா்க்) என்பது ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய குழுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments