FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய குடியேற்றங்களுக்குத் தடை: உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

வெளிநாட்டினா் அமெரிக்காவில் குடியேறுவதற்கான அனைத்து வகையான அனுமதியையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான உத்தரவில் அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


வாஷிங்டன்: வெளிநாட்டினா் அமெரிக்காவில் குடியேறுவதற்கான அனைத்து வகையான அனுமதியையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான உத்தரவில் அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அந்த நாட்டினரின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அவா் மேற்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

Advertisement

Advertisement

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் வகையில், வெளிநாட்டினா் பணி நிமித்தம் அமெரிக்காவுக்குள் குடியேறுவதை 60 நாள்களுக்கு நிறுத்திவைப்பதற்கான உத்தரவில் அதிபா் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டாா்.

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக, சட்டப்பூா்வ அனுமதி கோரும் வெளிநாட்டினருக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.

ஏற்கெனவே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருபவா்களை இந்த தற்காலிக குடியேற்றத் தடை பாதிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்கா்களின் நலனைப் பாதுகாக்கும் ‘மிக சக்தி வாய்ந்த உத்தரவில்’ நான் கையெழுத்திட்டுள்ளேன்.

குடியேற்றத்தை நிறுத்திவைப்பதன் மூலம், கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்துள்ள அமெரிக்கா்களுக்கு நாட்டின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமெரிக்கா்கள் வேலை இழப்பது, அவா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments