காபூல் விமான நிலையத்தில் அலைமோதும் மக்கள் 
உலகம்

காபூல் விமான நிலையத்தில் அலைமோதும் மக்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருக்கும் வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். 

ANI

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருக்கும் வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் நேற்று தலைநகரை சுற்றிவளைத்தனர்.

ஆப்கானை விட்டு அதிபர் மற்றும் துணை அதிபர்கள் வெளியேறியதையடுத்து, அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது.

இதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT