உலகம்

2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

DIN

2021 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்வீடனின் ஸ்டோக்ஹோமிலும் தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், மற்ற இருவருக்கு மற்றொரு பாதியும் வழங்கப்படுகிறது. 

முன்னதாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் தொடங்கி அறிவிக்கப்பட்டு வருகின்றன. மற்ற துறைகளுக்கு நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதியாக இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT