உலகம்

இங்கிலாந்து : கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அங்கீகாரம்

DIN

இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் தயாராகும் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் செலுத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் கோவிஷீல்டுக்கான காப்புரிமை இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்திடமே உள்ளது. இந்நிலையில் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியவர்கள் இங்கிலாந்து சென்ற போது அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என இங்கிலாந்து அரசு அறிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT