பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 
உலகம்

உதவியாளர் பணிக்கு 15 லட்சம் பேர் போட்டி: பாகிஸ்தானில் அதிகரிக்கும் வேலையின்மை

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதாக  பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதாக  பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகள் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களில் 24 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய வேலைவாய்ப்பின்மை அறிக்கையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற பெண்களில் 40 சதவிகிதத்தினர் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் அறிக்கையின் படி ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு 15 லட்சம் பேர் போட்டியில் உள்ளது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் சார்பில் எத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்படாததை சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையானது நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தரவு விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் 16 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு ஆய்வின்படி வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2017-18ஆம் ஆண்டில் 5.8 ஆகவும் அதுவே 2018-19ஆம் ஆண்டில் 6.9 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியீடு!

ராகுலின் கேள்விகளுக்கு பாஜகவால் பதிலளிக்க முடியுமா? - கே.சி. வேணுகோபால் கேள்வி

#savafg | பற்றிக் கொண்ட டி20 உலகக் கோப்பை தீ: விருந்தளித்த SA v AFG ஆட்டம் | T20 World Cup | #t20wc

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை: முதல்வர் வழங்குகிறார்!

அமெரிக்க காவல் வாகனம் மோதி பலியான இந்திய பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடி இழப்பீடு

SCROLL FOR NEXT