ஜப்பான்- வணிக கட்டடத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஜப்பானின் ஒசாகா மாவட்டத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தின் 4-வது மாடியில் இன்று காலை திடிரென தீப்பிடிக்க ஆரம்பித்தது.
உடனடியாக மீட்புப்படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்களில் 27 பேர் பலியானதாகவும் , ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
மேலும், கட்டடத்தில் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.