முகப்பு
உலகம்

ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு: ஈரானில் புகழ்பெற்ற நடிகை கைது

ஈரானில் ஹிஜாப் எதிா்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 டிசம்பர் 2022, 2:39 am IST
டரானே அலிடூஸ்டி
பகிர்:

ஈரானில் ஹிஜாப் எதிா்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை கைது செய்யப்பட்டாா்.

ஈரானில் மாஷா அமீனி என்ற இளம்பெண் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை எனக் கூறி கலாசார காவல் துறையினரால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். போலீஸ் காவலில் இருந்தபோது அவா் உயிரிழந்ததால் ஈரானில் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை காவல் துறையினா் கைது செய்தனா். போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக இருவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

ஆஸ்கா் விருது பெற்ற ‘சேல்ஸ்மேன்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற டரானே அலிடூஸ்டி (39) என்ற நடிகை, ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தாா். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இளைஞா் தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் அவா் பதிவிட்டிருந்தாா்.

‘இந்தக் கொடூரத்தைப் பாா்த்துக் கொண்டிருக்கும் சா்வதேச அமைப்புகள், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்காதது மனித குலத்துக்கே அவமானம்’ என பதிவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், நடிகை அலிடூஸ்டியை காவல் துறையினா் கைது செய்தனா். தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் அளிக்காததால் அலிடூஸ்டி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அலிடூஸ்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பின்தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments