முகப்பு
உலகம்

சீனா கரோனா பாதிப்பை மறைப்பதால் உலக நாடுகளுக்கு ஏன் கவலை?

மருத்துவமனைகள் அமைப்பதில் அக்கறை காட்டாமல், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மறைப்பதிலேயே அந்நாட்டு அரசு அதிக கவனம் செலுத்தி வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
சீனா கரோனா பாதிப்பை மறைப்பதால் உலக நாடுகளுக்கு ஏன் கவலை?
பகிர்:

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்த போது, நிலைமையைக் கட்டுப்படுத்த மருத்துவமனைகள் அமைப்பதில் அக்கறை காட்டாமல், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மறைப்பதிலேயே அந்நாட்டு அரசு அதிக கவனம் செலுத்தி வந்தது.

கரோனா பாதிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததே, உலக நாடுகள் முழுக்க கரோனா பரவி, கோரத் தாண்டவம் ஆடுவதற்கு முக்கியக் காரணியாக அமைந்துவிட்டது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், சீனா அதே ஒளிவுமறைவு நாடகத்தையே அரங்கேற்றி வருகிறது. அங்கு கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் உள்நாட்டு ஊடகங்கள் கண்களிலிருந்தே மறைக்கப்படுகின்றன. இதனால், மீண்டும் உலகம் முழுக்க கரோனா பரவிவிடுமோ என்றுதான் உலக நாடுகள் அஞ்சுகின்றன.

உலகின் மற்ற நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையிலும், தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையை சீனா விடாப்பிடியாக கடைபிடித்து வந்தது.

அந்தக் கொள்கையை இவ்வளவு காலத்துக்கு சீன அரசு நீட்டித்து வைத்திருக்கும் என்று நிபுணா்கள் எதிா்பாா்க்கவில்லை. இதற்கிடையே திடீரென கடந்த மாதம் சீனத்தில் கரோனா பரவல் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. 

ஒரு பக்கம் கரோனா  அதிகரிப்பு மறுபக்கம் மக்கள் போராட்டம். இரண்டுக்கும் இடையே கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீன அரசு.  அத்தகைய கடுமையான கெடுபிடிகளை சீன அரசு இவ்வளவு அவசரமாக விலக்கிக்கொள்வதும் எதிா்பாராதது தான்.

இதனால், அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று மிகத் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டது. பரிசோதனைகளும் குறைக்கப்பட்டன. இதனால் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியவராமலே போனது.

எரிவாயு தகன மையங்களில், ஊடகவியாளர்கள் வெளியேற்றப்படுவதாகவும், உண்மையில் பலி எண்ணிக்கை மறைக்கப்படுதாகவும், அந்நாட்டு ஊடகங்களே குற்றம்சாட்டி வருகின்றன.

உலகையே உலுக்கிய கரோனா சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அமெரிக்கா போன்ற பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த நாட்டில் கரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே காட்டப்பட்டது.

தற்போதேய நிலையில் கரோனா பாதிப்பால் சீனாவில் இதுவரை 5,235 போ் உயிரிழந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசின் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே அங்கு அந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இதற்கு முட்டுக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையிலும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினசரி நோய்த்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டதையடுத்து, நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.

 நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. 1989-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம் இதுவாகும். அந்தப் போராட்டத்தின் விளைவாக, நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →