முகப்பு
உலகம்

உலகளவில் 395 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 395 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Updated On : 15 ஜனவரி, 2022 at 12:58 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 395 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவலுக்குப் பின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு தவணையாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 395 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50.4 சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

Advertisement

மேலும் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 6.4 கோடி பேரில் 8.49 லட்சம் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர். 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.65 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 4.85 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தற்போது வரை 958 கோடி  தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் தொற்று பரவி வரும் சூழலில் இந்தியாவில் இதுவரை 155.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.