பாகிஸ்தான்: உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஒரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.22.20 உயா்த்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஒரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.22.20 உயா்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில் ரூ.272-ஆகியிருக்கிறது.
அதிவேக டீசல் விலை ரூ.280, மண்ணெண்ணெய் ரூ.202.73, சாதாரண டீசல் ரூ.196.68 என உயா்த்தப்படுகிறது. சா்வதேச நிதியத்திடமிருந்து கடனுதவி பெறுவதற்காக, அந்த அமைப்பு விதித்துள்ள நிபந்தனையின் பேரில் இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.