முகப்பு
உலகம்

காஸாவில் மணிப்பூர் சம்பவம்! உறுதி செய்த இஸ்ரேல்!!

காஸாவில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விடியோ இணையத்தில் வைரலாகியது.

Updated On : 30 அக்டோபர் 2023, 6:28 pm IST
ஷானி லோவுக் கடவுச்சீட்டு / தாயார்
பகிர்:


காஸாவில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விடியோ இணையத்தில் வைரலாகியது.

கொலைசெய்யப்பட்ட இளம்பெண் இஸ்ரேல் படையைச் சேர்ந்தவர் என ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதை இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 

ஹமாஸ் படையினர், தங்கள் (டிரக்) வாகனத்தில் ஆடைகளின்றி இளம் பெண் ஒருவரை ஊர்வலமாக அழைத்து வரும் விடியோ இணையத்தில் கடந்த சனிக்கிழமைமுதல் வைரலானது.

Advertisement

Advertisement

அதில் அப்பெண்ணைச் சுற்றிலும் ஹமாஸ் படையினர் சூழ்ந்து கூச்சலிடுவதும், உடலில் எச்சில் துப்புவதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்ட பெண் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர் என ஹமாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச்சென்று கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் காஸா எல்லையில் அமைதி நிலவ வலியுறுத்தி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இஸ்ரேலுக்கு வருகைப்புரிந்துள்ளார் ஷானி லோவுக். 30 வயதான இவர், டாட்டூ கலைஞர். இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை ஹமாஸ் படையினர் கடத்தியுள்ளனர். 

(இசை நிகழ்ச்சி நடைபெற்றபோது ஹமாஸ் படையினர் அப்பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்ததாக கூறப்படுகிறது.)

கடத்தப்பட்ட இளம்பெண் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர் ஷானி லோவுக் என்றும் அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்றும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ஷானி லோவுக்கின் தாயார் மற்றும் சகோதரியின் சமூகவலைதள பதிவும் வெளியாகியுள்ளது. அந்த விடியோவில் இருப்பது தனது மகள், என்றும் அவரின் உடலில் இருக்கும் டாட்டூக்களையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். தனது மகளின் உடலையாவது ஒப்படைக்கும்படி ஹமாஸ் படையினருக்கு கோரிக்கை வைக்கும் தாயாரின் விடியோ வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஷானி லோவுக் சகோதரி அதி லோவுக் வெளியிட்டுள்ள பதிவில், இது என் சகோதரி ஷானி லோவுக். ஹமாஸ் படையால் கடத்தப்பட்டார். அவர் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments