உலகம்

வங்கதேசம்: கலவரத்தில் ஹோட்டலுக்கு தீவைப்பு! 24 பேர் பலி!

இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அச்சம்

DIN

வங்கதேசத்தில் கலவரத்தில் ஹோட்டலுக்கு தீவைக்கப்பட்டதால் 24 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கதேசத்தில் கலவரத்தின்போது, அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷாஹின் சக்கலாடர் என்பவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் தரைத்தளத்தில் வைக்கப்பட்ட தீ, அதிவேகமாக மேல் தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டலினுள்ளே தங்கியிருந்தவர்களில் 24 பேர் பலியாகியுள்ளனர்; உயிரிழந்தவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

அதுமட்டுமின்றி, ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும், அவாமி கட்சியின் மத்திய அலுவலகம், அவாமி கட்சியின் பல தலைவர்களின் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், அவாமி கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை T.Nagar மேம்பாலம்! முதல்வர் M.K.Stalin திறந்துவைத்தார்! | DMK | Flyover | Shorts

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

ருஷ்யக் கதைகள்

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

மண்டோதரி

SCROLL FOR NEXT