டிசம்பர் என்றாலே.. பயங்கர நிலநடுக்கம்! எப்படி இருக்கிறது வனுவாட்டு தீவு?
பயங்கர நிலநடுக்கம் தாக்கிய நிலையில் வனுவாட்டு தீவு எப்படி இருக்கிறது
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
எஃபேட் கடலோரப் பகுதிக்கு 30 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவானது. 57.1 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதன் அதிா்வுகளால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 14 போ் உயிரிழந்ததாகவும் சுமாா் 200 போ் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 25 செ.மீ. உயரத்துக்கு சுனாமி ஏற்பட்டது.
Advertisement
Advertisement
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் வனவாட்டு அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து இன்னும் முழு விவரம் வெளியாகாத நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.