முகப்பு
உலகம்

ஓய்வு வயது வரம்பை உயா்த்தும் சீனா

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 23 ஜூலை, 2024 at 10:15 PM
பகிர்:

பெய்ஜிங்: சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1949-இல் 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லை.

இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது வரம்பை இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65-ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →