FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சோமாலிலேண்ட் அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி!

சோமாலியாவின் பிரிவினைப் பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியீடு...

Updated On : 19 நவம்பர் 2024, 5:47 pm IST
அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி - AP
பகிர்:

சோமாலிலேண்ட் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்று அதிபராகிறார்.

கிழக்கு ஆப்பிரிக்க தேசமான சோமாலியாவின் பிரிவினைப் பகுதியாகவுள்ள சோமாலிலேண்ட் குடியரசில் கடந்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று(நவ. 19) அறிவிக்கப்பட்டுள்ளன.

சோமாலிலேண்ட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற வேண்டிய தேர்தல், அந்நாட்டு அரசின் நிதிப் பற்றாக்குறை உள்பட பிற காரணங்களுக்காக தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

சோமாலிலேண்ட் தேசிய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ‘இர்ரோ’ என்று அழைக்கப்படும் வாடானி கட்சித் தலைவரான அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹிக்கு 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளன.

சோமாலிலேண்ட் அதிபர் முஸே பிஹி அப்டி(குல்மியே கட்சி) இந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். அவருக்கு சுமார் 35 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

சோமாலியாவின் ஓர் அங்கமாக இருந்த சோமாலிலேண்ட், 1991-ஆம் ஆண்டு தங்கள் பகுதியைச் சுதந்திரமடைந்த நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், சோமாலிலேண்ட்டுக்கு சர்வதேச அளவில் குடியரசு நாடாக இன்றளவும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அங்குள்ள சுமார் 6 மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

சோமாலிலேண்ட்டுக்கான சர்வதேச அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதை முன்னிறுத்தியே இரு தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், சோமாலிலேண்ட்டுக்கான சர்வதேச அங்கீகாரம் அளிக்க அமெரிக்க தரப்பிலிருந்து நேர்மறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இர்ரோ இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உறுதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments