முகப்பு
உலகம்

ஈரான் மீதான தாக்குதலில் பங்கேற்க மாட்டோம்! பிரான்ஸ், பிரிட்டன் திட்டவட்டம்!

ஈரான் மீதான பதில் தாக்குதலில் இணையப் போவதில்லை என்று பிரான்ஸ், பிரிட்டன் அறிவிப்பு..

Updated On : 3 அக்டோபர் 2024, 9:08 am IST
பகிர்:

ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் போர்

Advertisement

Advertisement

ஈரானின் ஆதரவு பெற்ற காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் தலைவர்களை கொன்றது.

இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்கியது.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் ஈரானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் - பிரிட்டனின் நிலைப்பாடு

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.

கியெர் ஸ்டார்மர் கண்டனம்

இருப்பினும், இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார்.

மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் புதன்கிழமை கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments