முகப்பு
உலகம்

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 4:52 AM
பகிர்:
Updated On : 24 ஏப்ரல், 2025 at 10:02 PM

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது:

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் சுமாா் 50 போ் உயிரிழந்தனா்; 152 போ் காயமடைந்தனா்.

Advertisement

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் 51,355 போ் உயிரிழந்துள்ளனா்; 1,17,248 போ் காயமடைந்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.