பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு AP
உலகம்

பாக். - ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! 4 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையில் இருநாட்டுப் படைகளுக்கு இடையே திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சாமன் நகரில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் உடனான எல்லையில், நேற்று (டிச. 5) இரவு 10.30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, இருநாட்டுப் படைகளுக்கு இடையில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 4-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, ஆப்கானிஸ்தானின் ஸ்பின் பொல்டாக் மாவட்ட ஆளுநர் அப்துல் கரீம் ஜஹாத் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் கடந்த அக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், இந்தப் புதிய தாக்குதலுக்கு இருநாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், முதலில் தலிபான்கள் எல்லையில் திடீர் தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தானின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தான் உடனான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் - மறுவெளியீடு! எப்போது?

Four people have been killed in a sudden gunfight on the border between Pakistan and Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசத்திய குழந்தைகள்...

ஆந்திரம்: முன்னாள் காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி வைரஸ் ஊசி செலுத்திய பெண் கைது

விசில் சின்னத்தை அறிமுகம் செய்த தவெக தலைவர் விஜய்! | TVK

ஏப்ரல் வெளியீட்டில் கர?

மீல் மேக்கர் குழம்பு

SCROLL FOR NEXT