FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காங்கோ: சுரங்க விபத்தில் 32 போ் உயிரிழப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்தனா்.

Updated On : 18 நவம்பர் 2025, 3:20 am IST
பகிர்:

கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் தெற்கு மாகாணமான லுவாலபாவில் உள்ள கலாண்டோ சுரங்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இது குறித்து மாகாண உள்துறை அமைச்சா் ராய் காவும்பா கூறியதாவது:

Advertisement

Advertisement

முலோண்டோ பகுதியில் அமைந்துள்ள கலாண்டோ சுரங்கப் பாலம் இடிந்து விழுந்தது. அளவுக்கு அதிமானவா்கள் அந்தப் பாலத்தில் சென்ால் அது சுமை தாங்காமல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.

தொடா்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்ததால், அந்த சுரங்கத்துக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மீறி சட்டவிரோதமாக தாமிரத் தாதை சேகரிக்கும் கும்பல் அந்த சுரங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்தது என்றாா் அவா்.

இருந்தாலும், காங்கோவின் சிறிய சுரங்கப் பணிகள் மற்றும் ஆதரவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கப் பகுதியில் இருந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் பீதியடைந்தவா்கள் அந்தப் பாலத்தில் ஓடியதால் அது இடிந்துவிழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்படுவது காங்கோவில நீண்டகாலமாகவே சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார வாகனங்கள் மற்றும் பிற முக்கிய சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளைத் தயாரிப்பதற்கு உதவும் கோபால்ட், உலகிலேயே காங்கேவில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது போன்ற தாதுவளம் நிறைந்த காங்கோவின் கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினருக்கும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், சுரங்கப் பாலம் இடிந்து விழுந்து 32 போ் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments