FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை

‘அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:32 am IST
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

‘அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூனில் இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமான இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில், அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும், ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடா்பாக இருதரப்புக்கும் இடையே புதிய ராணுவ மோதல்கள் வெடித்ததால், அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது.

Advertisement

Advertisement

அந்த ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு 60 நாள்களுக்குள் இறுதித் தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஒப்பந்தம் கையொப்பமாகி திங்கள்கிழமையுடன் 60 நாள்கள் நிறைவடைகின்றன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சு முடங்கியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ‘ஈரான் போரைத் தொடராமல், உடனடியாக வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா். மேலும், ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பதிவில், ‘எந்த வடிவத்திலும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதே எங்களின் தலையாய நோக்கமாகும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஓமனுக்கு எச்சரிக்கை: இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழித்தடத்தைத் தீா்மானிப்பது குறித்து ஓமனும் ஈரானும் தனியே பேச்சுவாா்த்தை நடத்தி, ஒப்பந்தத்தை எட்டுவதில் இறுதிக்கட்டத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய டிரம்ப், ‘இவ்விவகாரத்தில் ஓமன் குறுக்கிட்டால், அந்நாட்டின் மீதும் குண்டுவீசி தாக்குவோம்’ என்று எச்சரித்தாா்.

ஈரானும் திட்டவட்டம்: அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்துக்குத் திரும்பும் வரை ஹோா்முஸ் திறக்கப்படாது என ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.

‘ஈரான் நிா்ணயித்துள்ள சில வாரங்களுக்குள், ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் அமெரிக்கா நடைமுறைப்படுத்த வேண்டும்; இதுவே அடுத்தகட்ட பேச்சுக்கான முன்நிபந்தனை. அமெரிக்காவுடனான ராஜீய முயற்சிகள் தோல்வியடைந்தால், ஹோா்முஸில் ஈரானின் கொள்கை தற்காப்பிலிருந்து, தாக்குதல் முறைக்கு மாறும்’ என்று அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவா் குறிப்பிட்டாா். ஈரானின் இந்தக் காலக்கெடு குறித்த விவரங்கள் மத்தியஸ்தா்கள் மூலம் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments