FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உயிருடன் உள்ளாரா மோஜ்தபா கமேனி? விடியோ வெளியிட்ட ஈரான்!

மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? என்ற விவாதங்கள் எழுந்துவரும் நிலையில் ஈரான் விடியோ வெளியிட்டுள்ளது பற்றி...

மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? - படம் - ஏபி
பகிர்:

மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? என்ற விவாதங்கள் எழுந்துவரும் நிலையில் அவர் சிலருடன் உரையாடுவது போன்ற விடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் கடந்த பிப். 28 ஆம் தேதி அப்போதைய ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரது மகனான மோஜ்தபா கமேனி சில நாள்களிலேயே உச்ச தலைவராகப் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

Advertisement

Advertisement

அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காரணம்காட்டி தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கில்கூட அவர் பங்கேற்கவில்லை.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மோஜ்தபா கமேனி காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்தும்கூட இருக்கலாம் என அவ்வபோது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு, ஈரான் தரப்பில் மோஜ்தபா கமேனி சிலருடன் பேசுவது போன்ற விடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து, இதே மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு விடியோவை ஈரான் வெளியிட்டிருக்கிறது.

இந்த விடியோவில் கமேனியை சிலர் சூழ்ந்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல்கள் தொடங்குவதற்கு முன்னர், அவர்கள் பிரார்த்தனை செய்வது போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த இரண்டு விடியோக்களிலும் தேதி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Amidst emerging debates over whether Mojtaba Khamenei is alive, Iran has released a video showing him conversing with a few individuals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments