அமெரிக்கப் பாடகி டோலி பார்ட்டன் காலமானார்! அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி!
பிரபல அமெரிக்க நாட்டுப்புறப் பாடகி டோலி பார்ட்டன் காலமானதைப் பற்றி..
பிரபல அமெரிக்க நாட்டுப்புறப் பாடகி டோலி பார்ட்டன் (Dolly Parton) நாஷ்வில் நகரில் காலமானார். அவருக்கு வயது 80.
அமெரிக்க இசையுலகில் மிகவும் புகழ்பெற்ற பாடகி டோலி பார்ட்டன், ஜோலீன் மற்றும் ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ , 9 டு 5, ஸ்டீல் மேக்னோலியாஸ் போன்ற காலத்தால் அழியாத பாடல்களின் மூலம் உலகளாவிய இசை அடையாளமாக உருவெடுத்தவர்.
பல தசாப்தங்களாக நீடித்த அவரது இசைப் பயணத்தில் அவருக்கு 10 கிராமி விருதுகள், 25 முதல் இடத்தைப் பிடித்த நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் 47 முதல் 10 இடங்களுக்குள் வந்த ஆல்பங்கள் உள்பட அவருக்கு மிகப்பெரிய வெற்றிகளைத் தேடிதந்தது. அவரது இசை, தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருந்தது.
Advertisement
Advertisement
இசை மற்றும் சினிமாவைத் தவிர, டோலி தனது கொடைப் பணிகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டார். டோலிவுட் அறக்கட்டளை மற்றும் இமேஜினேஷன் லைப்ரரி மூலம், குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளித்ததுடன், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்குப் புத்தகங்களை வழங்கியும் உதவினார்.
கிராமப்புற டென்னசியில் வறுமையான சூழலில் இருந்து உலகப் புகழ் பெற்ற நட்சத்திரமாக உயர்ந்த டோலி பார்ட்டனின் பயணம், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் கதைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.
அவரது மறைவுச் செய்தி, திரையுலகில் அவரது ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. டோலி பார்ட்டனின் பாடல்கள் திரைப்படங்கள் மற்றும் சமூக அர்ப்பணிப்பு பணிகள், தலைமுறைகளுக்கும் அவரது புகழைத் தொடர்ந்து நிலைநிறுத்தும்.
அண்மைக் காலத்தில் புற்று நோயுடன் போராடி வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டன. அவரது மறைவையடுத்து எம்பயர் ஸ்டேட் கட்டடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியேற்றப்பட்டது.
டோலி பார்ட்டனின் மறைவு பல லட்சக்கணக்கான ரசிகர்களுக்குப் பேரிழப்பு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வாரத்திற்குத் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.