குழந்தை பெற்றால் ரூ.53 லட்சம்! மக்கள் தொகையைப் பெருக்க அரசின் புதிய திட்டம்!!
சிங்கப்பூரில் மக்கள் தொகையைப் பெருக்க ஒரு குழந்தை பெற்றால் ரூ.53 லட்சம் பரிசுத் தொகை வழங்கும் அரசின் புதிய திட்டம் அறிமுகம்
சிங்கப்பூரில் குறைந்துவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பிரதமர் லாரன்ஸ் வாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், சிங்கப்பூரில் அழகான குடும்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. குழந்தைப்பேறு, கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளால், இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப்போடுகிறார்கள்.
Advertisement
Advertisement
மேலும் சிலர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக் கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை. எனவே, ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய நாளை முன்னிட்டு பிரதமர் அளித்த பேட்டியில், நாடு குழந்தைப் பேற்றை அதிகரிக்க விரும்புகிறது என்ற தகவலை வெளியிட்டார்.
2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான குழந்தை பிறந்தால் ரொக்கப் பரிசு வழங்குவது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ.53 லட்சம் குழந்தை போனஸ் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது அவர்களது 17 வயது வரை ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கப் பரிசு திட்டம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அது மட்டுமல்லாமல், குழந்தைகள் பராமரிப்பு செலவு, கல்விச் செலவுகளையும் குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rs. 53 lakh for born baby Govt new scheme to boost the population
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.