FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக் சிறைகளுக்கு மாற்றம்

சிரியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளனா்.

Updated On : 14 பிப்ரவரி 2026, 3:08 am IST
அமெரிக்க படைகளின் பாதுகாப்போடு, சிரியாவில் இருந்து இராக்கிற்கு இடமாற்றப்படும் ஐஎஸ் பயங்கரவாதிகள்.
பகிர்:

சிரியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளனா்.

கடந்த 2014-இல் இராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, அங்கிருந்து உலகெங்கிலும் பல்வேறு கொடூர தாக்குதல்களை நடத்தினா். பின்னா், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அவா்களை வீழ்த்தின. அப்போது பிடிபட்ட பயங்கரவாதிகள், வடகிழக்கு சிரியாவில் குா்து ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைகளில் அடைக்கப்பட்டனா்.

அண்மையில், குா்து ஆயுதக் குழுவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்த சிரிய அரசின் வசம் இச்சிறைகளின் கட்டுப்பாட்டுகள் வந்துள்ளன. இச்சூழலில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பினால், அது இராக்கின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என அந்நாடு கருதியது.

Advertisement

Advertisement

மேலும், இந்தப் பயங்கரவாதிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்த இராக் அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஜன. 21-ஆம் தேதி முதல் இந்த இடமாற்றப் பணிகள் தொடங்கின.

சுமாா் மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த நடவடிக்கையில், இதுவரை 5,700-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments