FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீன காலனி தொழிற்சாலையில் தீ விபத்து

கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு காலனி தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 போ் உயிரிழந்தனா்.

கோப்புப் படம்
பகிர்:

கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு காலனி தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 போ் உயிரிழந்தனா்.

இக்கோர விபத்தில் தீ மளமளவெனப் பரவி தொழிற்சாலை முழுவதையும், அருகிலுள்ள மற்ற கட்டடங்களையும் சூழ்ந்து கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் விடியோவாக வெளியாகியுள்ளன.

தீ விபத்து குறித்து சீன அதிபா் ஷி ஜின்பிங் விடுத்த செய்தியில், ‘மீட்பு, தேடுதல் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments