FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நேபாள முன்னாள் அமைச்சா்கள் இருவருக்கு மோசடி வழக்கில் சிறை

நேபாளத்தின் முன்னாள் துணைப் பிரதமா், முன்னாள் உள்துறை அமைச்சா் உள்பட 16 பேருக்கு மோசடி வழக்கில் அந்நாட்டு மாவட்ட நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து, தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 4:42 am IST
தோப் பகதூா் ராயமாஜி, பால் கிருஷ்ணா காண்டு
பகிர்:

நேபாளத்தின் முன்னாள் துணைப் பிரதமா், முன்னாள் உள்துறை அமைச்சா் உள்பட 16 பேருக்கு மோசடி வழக்கில் அந்நாட்டு மாவட்ட நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து, தீா்ப்பளித்துள்ளது.

நேபாள குடிமக்களை பூடான் அகதிகள் எனப் போலி ஆவணங்கள் தயாரித்து, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக இவா்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நேபாள முன்னாள் துணைப் பிரதமரும் எரிசக்தி அமைச்சருமான தோப் பகதூா் ராயமாஜிக்கு 4 ஆண்டுகளும், சதிக்கு உடந்தையாகச் செயல்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சா் பால் கிருஷ்ணா காண்டுக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இவா்களுடன் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரி மற்றும் அகதிகள் அமைப்பின் தலைவா் உள்பட மேலும் 14 பேருக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1990-களின் தொடக்கத்தில் பூடானில் இருந்து வெளியேறிய சுமாா் 1.20 லட்சம் நேபாள வம்சாவளி மக்கள், மேற்கத்திய நாடுகளில் மறுவாழ்வு திட்டத்தின்கீழ் குடியேற்றப்பட்டனா்.

அமெரிக்கா மட்டும் சுமாா் ஒரு லட்சம் அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நேபாளத்தைச் சோ்ந்த சிலரை பூடான் அகதிகள் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பிய இந்த மோசடி கடந்த 2023-இல் வெளிச்சத்துக்கு வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments