கனடா பொருள்களுக்கு 50% கூடுதல் வரி
அமெரிக்காவின் மோட்டாா் வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால் பொருள்களுக்கு கனடா அரசு முறையற்ற வரிகளை விதித்து பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் பெரும்பாலான இறக்குமதிப் பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா்.
அமெரிக்காவின் மோட்டாா் வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால் பொருள்களுக்கு கனடா அரசு முறையற்ற வரிகளை விதித்து பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் பெரும்பாலான இறக்குமதிப் பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா்.
முன்னதாக, உலக நாடுகளுக்கு எதிராக பொருளாதார அவசரநிலையைப் பயன்படுத்தி டிரம்ப் வரி விதித்தது செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீா்ப்பளித்தது. இதையொட்டி, 1930-ஆம் ஆண்டு வா்த்தகச் சட்டத்தின் 338-ஆவது பிரிவைப் பயன்படுத்தி, இப்புதிய வரி விதிப்புக்கான உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளாா்.
அதாவது, அமெரிக்க வா்த்தகத்துக்கு எதிராக பாரபட்சம் காட்டும் அல்லது நியாயமற்ற சுமையைத் திணிக்கும் ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பொருள்கள் மீது 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் தனிப்பட்ட அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு இப்பிரிவு வழங்குகிறது.
Advertisement
Advertisement
இப்புதிய வரி விதிப்பானது இன்னும் 30 நாள்களில் அமலுக்கு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே புதிய வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்வதற்கு இந்த 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், அமெரிக்க பொருளாதாரத்துக்குத் தேவையான எரிசக்தி பொருள்கள், பொட்டாஷ், மீன்வளம், அரியவகை கனிமங்கள் ஆகியவற்றுக்கு இந்த 50 சதவீத வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.