10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை? பிரபல பாடகர் மீது புகார்: போலீஸார் விசாரணை
பிரான்ஸ் : பத்ரிக் ப்ரூயேல் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் - பிரான்ஸ் போலீஸார் விசாரணை
பாரிஸ் : உலகளவில் ரசிகர்களிடம் பிரபலமான பிரெஞ்சு பாப் பாடகரும் நடிகருமான பத்ரிக் ப்ரூயேல் மீது பலதரப்பு பெண்கள் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகச் சுமத்தியிருப்பது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
‘ஏ சீக்ரெட்’, ‘வாட் இஸ் இன் ஏ நேம்?’, ‘ஏ பேக் ஆஃப் மார்பில்ஸ்’ உள்ளிட்ட குறிப்பிடும்படியான ஹாலிவுட் படங்களில் ஜனரஞ்சகமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தும் பல பாப் பாடல்கள் வழியாகவும் ரசிகர்களை ஈர்த்தவர் பத்ரிக் ப்ரூயேல். இந்நிலையில், தமது இளைமைக் காலத்தில் அவர் பெண்கள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரவலாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அவர் மீது இதுவரை 13 பெண்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த 2000-ஆம் ஆண்டில் அவர் தமது இல்லத்தில் 19 வயது இளம் பெண் ஒருவரிடம் அத்துமீறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட முயன்றதாக புதிதாக அவர் மீது புகார் ஒன்றும் வந்திருப்பதாகவும் இது தொடர்பான வழக்கு விரைவில் பதியப்படவிருப்பதாகவும் இவ்விவகாரம் குறித்த வழக்குகளை விசாரிக்கும் வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிந்துள்ள பிரான்ஸ் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை புதன்கிழமை (ஜூன் 10) வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பத்ரிக் ப்ரூயேலிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
Patrick Bruel in police custody over alleged rape, sexual assault
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.