மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையில் பட்டினி அபாயம்: ஐ.நா.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக, இலங்கையில் மேலும் 13 லட்சம் மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் பட்டினிக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.
கொழும்பு: மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக, இலங்கையில் மேலும் 13 லட்சம் மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் பட்டினிக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே நடப்பு ஆண்டில் அடிப்படை உணவு உதவி தேவைப்படும் நிலையில் உள்ள 47 லட்சம் இலங்கை மக்களுடன் கூடுதலாக இவர்களும் இணையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை எழுப்பியதைத் தொடர்ந்து, பெரும் விவாதப்பொருளானது.
Advertisement
Advertisement
மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உலக நாடுகளாக இலங்கை, சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இந்த ஆய்வில் பிரதானமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு, இப்புதிய உலகளாவிய நெருக்கடி பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள இலங்கை அரசு ஏற்கெனவே எரிபொருள் நுகர்வுக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.