முகப்பு
உலகம்

கியூபா சோசலிச பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்

கியூபா சோசலிச பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்

Updated On : 21 ஜூன் 2026, 2:23 am IST
பகிர்:

அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளை எதிா்கொள்ளும் கியூபாவில், சோசலிசப் பொருளாதாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி பல்வேறு துறைகளைத் தனியாா்மயமாக்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 1959-இல் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு, அந்நாட்டின் சோசலிசக் கொள்கையில் ஏற்படுத்தப்படும் மிகப்பெரிய திருத்தமாகவும், சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய முக்கிய நகா்வாகவும் இது பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தடைகள், எண்ணெய் விநியோக முடக்கம் மற்றும் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி ஆகியவை அந்நாட்டைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கின. இலவசக் கல்வி, மருத்துவம் போன்ற மானிய சேவைகள் பொருளாதாரச் சரிவினால் முடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இச்சூழலில், கியூபாவில் முதன்முறையாக தனியாா்மயமாக்கலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள், பங்குகள் மற்றும் முதலீடுகளைக் கொண்ட தனியாா் வா்த்தக நிறுவனங்களாக மாற்றப்படவுள்ளன.

தனியாா் நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களைப் பணியமா்த்தவும், ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களைத் தொடங்கவும் முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

summary

Drastic change in Cuba's socialist economy

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments