மாயமான மலேசியா விமானத்தைத் தேடும் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா ஏா்லைன்ஸ் ‘எம்.எச்.370’ பயணிகள் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மலேசிய அரசு ஒப்புதல்
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா ஏா்லைன்ஸ் ‘எம்.எச்.370’ பயணிகள் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
‘ஓசன் இன்ஃபினிட்டி’ எனும் கடல்சாா் ரோபோடிக்ஸ் நிறுவனத்துடனான இதற்கான ஒப்பந்தம், அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்களைக் கண்டறிந்தால் மட்டுமே கட்டணம் (7 கோடி டாலா்) என்ற நிபந்தனையின் அடிப்படையில் நிறுவனம் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2014, மாா்ச் 8-ஆம் தேதி, மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகா் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்ட ‘போயிங் 777’ ரக விமானம், நடுவானில் திடீரென ரேடாா் கண்காணிப்பிலிருந்து மறைந்து மாயமானது. செயற்கைக்கோள் தரவுகளின்படி, அந்த விமானம் தனது வழக்கமான பாதையிலிருந்து மாறி, தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.