முகப்பு
உலகம்

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்திருப்பது பற்றி...

கெளதம் அதானி, டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
பகிர்:

தொழிலதிபர் கெளதம் அதானிக்கு எதிராக ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்த மோசடி வழக்கை டொனால்ட் டிரம்ப் அரசு கைவிட முடிவெடுத்துள்ளது.

வழக்கை கைவிட்டால் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று கெளதம் அதானி தரப்பில் தெரிவிகப்பட்டதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,450 கோடி) லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) தொடுத்துள்ள மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி தரப்பில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரும், புகழ்பெற்ற ’சல்லிவன் & கிராம்வெல்’ சட்ட நிறுவனத்தின் இணைத் தலைவருமான ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் தலைமையில் புதிய சட்டக் குழுவை சமீபத்தில் அதானி நியமித்திருந்தார்.

இந்த வழக்கை கைவிடுவது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நீதித்துறையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் கலந்துகொண்ட ஜியுஃப்ரா, வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதாரங்கள் அரசுத் தரப்பிடம் இல்லை எனக் கூறி சில சான்றுகளை சமர்ப்பித்து வாதிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க அதானி தயாராக இருப்பதாகவும் முறையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கெளதம் அதானிக்கு எதிரான மோசடி வழக்கை கைவிட அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலர் ஒப்புக் கொண்டதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொழில் பங்குதாரர்கள் மற்றும் குடியரசுக் கட்சிக்கு நன்கொடை அளித்த தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்குகள் அமெரிக்க நீதித்துறையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதானி மீது என்ன குற்றச்சாட்டு?

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,450 கோடி) லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப் பத்திரிகையில், ‘சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாகி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது மறைக்கப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை அவா்கள் மீறியதாக அந்நாட்டின் எஸ்இசி குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக நியூயாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்இசி வழக்கு தொடுத்தது. எனினும் தம் மீதான குற்றச்சாட்டுகளை கெளதம் அதானியும் சாகா் அதானியும் மறுத்திருந்தனா்.

summary

Trump Administration Decides to Drop Case Against Adani! $10 Billion Investment?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments