FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஃபுளோரிடாவில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் தனியாா் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனா்.

2 நவம்பர் 2026, 10:37 pm
சிசிடிவி கேமராவில் பதிவான விமானம் தரையில் மோதும் காட்சி | விபத்தையடுத்து சாலையில் உருவான பள்ளம்
பகிர்:

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் தனியாா் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனா்.

‘லியா்ஜெட் 60’ ரகத்தைச் சோ்ந்த இந்த விமானம், டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து, பஹாமாஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஃபுளோரிடா நகர வானில் சுமாா் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், ஒன்றரை நிமிஷத்துக்குள் தரையை நோக்கி செங்குத்தாக பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

தெற்கு புளோரிடாவில் உள்ள வீடுகள், பரபரப்பான சாலைக்கு அருகே வெடித்துச் சிதறியதில் விமானம் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்ததுடன், தரையில் பெரிய பள்ளமும் உருவானது. அதிருஷ்டவசமாக வீடுகள் மீது விழாமல் சில அடி தூரத்தில் விழுந்ததால் குடியிருப்புப் பகுதியில் பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், அவசரகால மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். விபத்து காரணமாக அப்பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments