அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 9 பேர் பலி!
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் குறித்து...
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு சிறிய ரக ஜெட் விமானம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, புளோரிடா மாகாணத்தின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்திலிருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருப்பினும், விமானம் விழுந்த பகுதியில் தரையில் இருந்த யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
Nine people were killed when a small aircraft crashed in the United States.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.