நைஜீரியாவில் பல வாகனங்கள் மோதல்: 20 பேர் பலி
நைஜீரியாவில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து பற்றி..
நைஜீரியாவில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் வட-மத்திய மாகாணமான பிளாட்டூவில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 20 பேர் பலியானதாக சாலைப் பாதுகாப்பு முகமை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை மீண்டும் சீரமைத்தனர். பிளாட்டூவையும் தலைநகர் அபுஜாவையும் இணைக்கும் முக்கியப் பாதையான ஹவான் கிபோ-ஜோஸ் வழித்தடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை நான்கு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், பிரேக் பழுதானதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மத்திய சாலைப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மோசமான சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தாதது போன்ற காரணங்களால், ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
A multi-vehicle crash killed at least 20 people in Nigeria's north-central state of Plateau, the road agency said Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.