FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

கென்யா, நைஜீரியாவில் சாலை விபத்துகள்! 37 போ் பலி!

ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, நைஜீரியாவில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 37 போ் உயிரிழந்தனா்.

கென்யா விபத்து - AP
பகிர்:

ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, நைஜீரியாவில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 37 போ் உயிரிழந்தனா்.

கென்யாவின் நகுரு மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பிராா்த்தனை தலத்தை நோக்கி, யாத்ரீகா்களுடன் வேன் ஒன்று நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியதில் வேன் ஓட்டுநா் மற்றும் அதில் பயணித்த 16 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதேபோன்று, நைஜீரியாவின் தலைநகா் அபுஜாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

ஆப்பிரிக்க நாடுகளில் வாகனங்கள் மற்றும் சாலைகளின் மோசமான பராமரிப்பு, அதிவேகம், போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றாதது போன்ற காரணிகளால் இத்தகைய விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments