FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் ஏற்பு! நெதன்யாகுவின் நிலை என்ன? அடுத்த பிரதமர் யார்?

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அதிபர் ஹெர்சாக் ஏற்றுக்கொண்டது குறித்து...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - (கோப்புப் படம்)
பகிர்:

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளை அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் சட்டப்பூர்வமான முடிவுகளாக ஏற்றுக்கொண்டார்.

இஸ்ரேலில், கடந்த வாரம் நடைபெற்ற 120 இடங்களுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை எனும் நிலையில், எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க இதுவரைத் தகுதி பெறவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவுகளை சட்டப்பூர்வமான முடிவுகளாக இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் இன்று (நவ. 4) ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனர்களின் ஆதரவைப் பெற்ற அரபு கட்சிகள் 19 இடங்களை வென்றுள்ள நிலையில், அந்தக் கட்சியினர் தேர்தலில், வெளிநாடுகளின் ஆதரவுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய தேர்தல் மறுத்துள்ள நிலையில், முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் முடிகளை அதிபர் ஹெர்சாக் ஏற்றுக்கொண்டது, நெதன்யாகுவின் குற்றச்சாட்டுகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வது குறித்து வெற்றி பெற்ற கட்சிகளுடன் அதிபர் ஹெர்சாக் ஆலோசனை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பிரதமர் நெதன்யாகுவின் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருவதால், இஸ்ரேலில் அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஐசன்கோட் புதிய பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that Israeli President Isaac Herzog has accepted the results of the country's parliamentary election as legitimate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.