FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ் வம்சாவளி நவீ பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! நெதன்யாகு கண்டனம்!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு நவநீதம் பிள்ளை தேர்வு செய்யப்பட்டதற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கண்டனம்...

9 அக்டோபர் 2026, 8:35 pm IST
நவநீதம் பிள்ளை - இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்
பகிர்:

2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நவநீதம் பிள்ளை தேர்வு செய்யப்பட்டதற்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய தென்னாப்பிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவீ பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என இன்று (அக்.9) அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியதாகத் தீர்மானித்த ஐ.நா. குழுவுக்கு நவநீதம் பிள்ளை தலைவராகப் பொறுப்பு வகித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு நவநீதம் பிள்ளை தேர்வு செய்யப்பட்டதற்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

”தார்மிக நெறிமுறைகளை நோபல் பரிசு குழு இழந்துவிட்டது. ஒரேயொரு யூத அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கண்டுபிடித்து பரப்புவதிலேயே தனது வாழ்க்கையைக் கட்டமைத்த ஒரு மதவெறியருக்கு அது (நோபல் பரிசு குழு) அதன் உயரிய விருதை வழங்குகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துவிடலாம் எனும் நம்பிக்கையில், இஸ்ரேலுக்கு எதிரான நவி பிள்ளையின் பொய்களைப் பயன்படுத்திகொண்ட ஒரு ஊழல் மிகுந்த வழக்கறிஞரை நியாயப்படுத்தியதுதான் அவரது (நவநீதம் பிள்ளை) சாதனையாகும்.

தன்னுடன் பணியாற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஊழியர்களாலேயே பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட கரீம் கான், இஸ்ரேலுக்கு எதிராக நவநீதம் பிள்ளை பொய்களின் மூலம் ஒரு போலியான வழக்கை உருவாக்கினார்.

பிள்ளை பொய்களை வழங்கினார். கான் அவற்றை ஆயுதமாக்கினார். இப்போது, தவறான வழிகாட்டுதல் பெற்ற நோபல் குழு உறுப்பினர்கள், நீதிக்கு எதிராகச் செயல்பட்டு யூதர்களை அரக்கர்களாகச் சித்தரித்த ஒரு பெண்ணை கௌரவிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

summary

Netanyahu has condemned the selection of Navanethem Pillay for the 2026 Nobel Peace Prize.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments