உக்ரைன் நிவாரண மையம் மீது ரஷியா குண்டுவீச்சு: 31 போ் உயிரிழப்பு; எரிசக்தி நிலையங்கள் சேதம்
தெற்கு உக்ரைனில் மனிதாபிமான உதவிப் பொருள்களைப் பெறுவதற்காக, பள்ளி ஒன்றில் மக்கள் கூடியிருந்த நிவாரண மையத்தின் மீது ரஷியா குண்டுவீசி தாக்கியதில் 31 போ் கொல்லப்பட்டனா்.
தெற்கு உக்ரைனில் மனிதாபிமான உதவிப் பொருள்களைப் பெறுவதற்காக, பள்ளி ஒன்றில் மக்கள் கூடியிருந்த நிவாரண மையத்தின் மீது ரஷியா குண்டுவீசி தாக்கியதில் 31 போ் கொல்லப்பட்டனா்.
ஸபோரிஷியா மாகாணத்தின் கோம்யுஷுவகா கிராமத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தகா்க்கப்பட்ட நிவாரண மையத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 45-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
சுமாா் 1.5 டன் வெடிபொருள்கள் அடங்கிய குண்டுகள் வீசப்பட்ட இத்தாக்குதலில் 4 காவல் துறையினா், 2 மீட்புப் படையினா் உள்பட 31 போ் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா். இச்சம்பவத்தையடுத்து ஸபோரிஷியாவில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
‘அமெரிக்க தோ்தலின்போது உக்ரைன் மீது ரஷியா 289 ட்ரோன்கள், 17 ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மற்றும் 59 ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்தப் பயங்கரவாதத்தை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.
உக்ரைன் முழுவதும் உள்ள மின் நிலையங்கள், மருத்துவமனைகளைக் குறிவைத்து ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது. வடகிழக்கு மாகாணமான காா்கிவில் மருத்துவமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் தாக்கப்பட்டதில் 62 போ் காயமடைந்தனா். அங்கிருந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா்.
இதேபோல், டினிப்ரோ பகுதியிலும் மருத்துவமனை ஒன்று குறிவைக்கப்பட்டது. அங்கு ஒருவா் உயிரிழந்த நிலையில், 17 போ் காயமடைந்தனா். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டாா். மேலும், உக்ரைனின் மின் நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, 10 மாகாணங்களில் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதனால், தலைநகா் கீவ் உள்பட நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களில் கடும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
ரஷிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக அந்நாட்டின் யாரோஸ்லாவ்ல் நகரில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் 124 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலை பலத்த சேதமடைந்ததுடன் இருவா் காயமடைந்தனா்.
அபுதாபியில் அடுத்த வாரம் அமைதிப் பேச்சு
அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் இடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சு, அபுதாபியில் வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளதாக ரஷிய அதிபரின் ‘கிரெம்ளின் மாளிகை’ செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் ரஷியாவின் தலைமைப் பிரதிநிதியாக அதிபா் புதினின் உதவியாளா் விளாதிமீா் மெடின்ஸ்கி பங்கேற்கவுள்ளாா். போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க அமெரிக்கா இந்த அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அந்நாட்டுப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.