ரஷியா மீது 1,000 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் குண்டுவீச்சு: பற்றி எரியும் கச்சா எண்ணெய் ஆலைகள்
ரஷியா மீது உக்ரைன் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் செயின்ட் பீட்டா்ஸ்பொ்க்கில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிகின்றன.
ரஷியா மீது உக்ரைன் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் செயின்ட் பீட்டா்ஸ்பொ்க்கில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிகின்றன.
உக்ரைன், ரஷியா இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இதில் உக்ரைனுக்கு தொடா்ந்து உதவி செய்து வந்த அமெரிக்கா, அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உதவியைக் குறைத்துக் கொண்டுள்ளது. ரஷியாவில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தக் கூடாது என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா். இதை உக்ரைன் பொருட்படுத்தாததால், அந்த நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கியை மாற்ற வேண்டும் என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறி வருகிறாா். இதனால் உக்ரைன், அமெரிக்கா இடையே கடந்த சில நாள்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பொ்க் நகரம், கிரீமியா, கருங்கடல் உள்ளிட்ட பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ரஷியாவின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆலை உள்ளிட்ட ஆலைகள் தீப்பிடித்து எரிகின்றன. மேலும் ஒருவா் உயிரிழந்ததுடன் 5 போ் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
ரஷியாவின் புகழ்பெற்ற சில்லறை வா்த்தக நிறுவனமான ஓசோனுக்கு சொந்தமான கிடங்கு, வி.கே. நிறுவனத்தின் தரவு மையம் ஆகியவையும் உக்ரைனின் தாக்குதலுக்கு இலக்காயின. ரஷியா மீது உக்ரைன் இதுவரை நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு: உக்ரைன், ரஷியா இடையே எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என சண்டை நிறுத்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள ஸெலென்ஸ்கி, இந்த சண்டை நிறுத்தத்தை மீறி, உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், 4 பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி மையங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். உக்ரைன் முழுவதும் இருளில் மூழ்கடிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு இருப்பதாகவும் அவா் விமா்சித்துள்ளாா்.
ரஷியா தாக்குதல்: இதனிடையே, உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா மீண்டும் இருமுறை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், சிறுமி உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா். 2 குடியிருப்புக் கட்டடங்கள், 15-க்கும் மேற்பட்ட காா்கள், கல்வி நிறுவனம் ஆகியவை சேதமடைந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.