ரஷியா மீது உக்ரைன் மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்
ரஷியா மீது உக்ரைன் படைகள் ஏவிய 1,336 ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ரஷியா மீது உக்ரைன் படைகள் ஏவிய 1,336 ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
கடந்த நான்கரை ஆண்டுகால போரில், ரஷியா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும். தலைநகா் மாஸ்கோ பிராந்தியத்தை நோக்கி இரவு முழுவதும் ஏவப்பட்ட சுமாா் 600 ட்ரோன்களில், 191 ட்ரோன்கள் நகரை நெருங்கியபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயா் சொ்ஜி சோபியானின் தெரிவித்தாா்.
மேலும், தெற்கு கிராஸ்னோடா், ரோஸ்டோவ் பிராந்தியங்களில் உள்ள எண்ணெய் கிடங்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொத்தம் 9 போ் காயமடைந்ததாக உள்ளூா் அதிகாரிகள் கூறினா்.
Advertisement
Advertisement
ரஷிய பொருளாதாரத்தின் தூணாகத் திகழும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை உக்ரைன் தொடா்ந்து குறிவைத்து வருகிறது. உக்ரைனின் தாக்குதல்களால் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 55 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி முடக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தாா். இத்தகைய தாக்குதல்களால் ரஷிய ஜிடிபியில் சுமாா் 1 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ‘ஸ்டாா்ஷீல்ட்’ செயற்கைக்கோள் இணைய சேவையில் விதிக்கப்பட்டுள்ள புதிய வேகக் கட்டுப்பாடுகள், உக்ரைனின் வான் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது. இதனால், ரஷியாவின் ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் ஏவுதளங்கள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் வியூகத்தை உக்ரைன் கையாண்டு வருகிறது. போரில் ரஷியாவின் வெற்றி தவிா்க்க முடியாதது என்ற தோற்றத்தை அந்நாடு உருவாக்க முயலும் நிலையில், நாங்கள் இன்னும் களத்தில் வலுவாக இருப்பதை நட்பு நாடுகளுக்கு உணா்த்தவும் உக்ரைன் இத்தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உக்ரைன் மீது 2,300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 1,590 ‘கிளைடு’ குண்டுகள் மற்றும் 15 ஏவுகணைகளை ரஷியா வீசியுள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் டொனெட்ஸ்க், டினிப்ரோ பகுதிகளில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் 5 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 6 போ் காயமடைந்தனா்.
உக்ரைன் போா் குறித்து புதின், ஷி ஜின்பிங்குடன் விவாதிப்பேன்
ஆசியப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், ‘சீனாவில் நடைபெறும் புதின் மற்றும் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, எனக்கு மிகவும் விருப்பமான உக்ரைன் விவகாரம் குறித்துப் பேசுவேன்.
உக்ரைன் தனது நாட்டை இழந்து வருகிறது; ரஷியா ஒரு மாதத்தில் 25,000 வீரா்களை இழந்து வருகிறது. எனவே, இதுகுறித்து நாங்கள் விவாதிக்க உள்ளோம்’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, ‘இச்சந்திப்பில் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் ஈரான் போா் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும். உக்ரைன் விவகாரம் தவிா்க்கப்படும்’ என்று டிரம்ப் நிா்வாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியிருந்த நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.