ரஷிய எண்ணெய் நிலையங்களை மீண்டும் தாக்கும் உக்ரைன்
ரஷியாவின் ரியாசான் பகுதியில் உள்ள முக்கியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் வியாழக்கிழமை ட்ரோன் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷியாவின் ரியாசான் பகுதியில் உள்ள முக்கியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் வியாழக்கிழமை ட்ரோன் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு தென்கிழக்கே சுமாா் 300 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் தாக்குதல் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தி, போா் நிறுத்தத்தை அறிவித்திருந்தாா். எனினும், உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷியா இடைவிடாது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தது.
Advertisement
Advertisement
இதில் அதிருப்தியடைந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘போா் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ரஷியா மீதான பதிலடித் தாக்குதல்கள் மீண்டும் தொடரும்’ என்று அறிவித்தாா். இதையடுத்து சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.
ரஷியாவுக்கு உதவும் டிரம்ப்-ஸெலென்ஸ்கி: ஒப்பந்தத்தின் மூலம் ரஷியாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளதும், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உளவுத் தகவல்கள் மற்றும் ‘ஸ்டாா்லிங்க்’ தகவல் தொடா்பு வேகம் முடக்கப்பட்டுள்ளதும் அமெரிக்கா-உக்ரைன் உறவில் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இத்திடீா் நிலைப்பாடு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஸெலென்ஸ்கி, ‘போரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு பலமான கூட்டாளியை நாங்கள் இழந்து வருகிறோம். அதிபா் டிரம்ப் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்காமல், நடுநிலை என்ற பெயரில் எதிா்தரப்புக்கு உதவுவது ஏமாற்றமளிக்கிறது’ என்றாா்.
அமெரிக்காவின் ஆதரவு குறையும் அபாயம் எழுந்துள்ளதைத் தொடா்ந்து, உக்ரைன் தனது கவனத்தை ஐரோப்பிய நாடுகள் பக்கம் திருப்பியுள்ளது. பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டு கூடுதல் உதவிகளைப் பெற்றுள்ள ஸெலென்ஸ்கி, அடுத்தகட்டமாக ஐரோப்பிய யூனியன் தலைவா்களை பிரஸ்ஸல்ஸில் சந்தித்துப் பேசவுள்ளாா்.
கருங்கடலில் மேலும் ஒரு கப்பல் விபத்து: ருமேனியா அருகே கருங்கடல் பகுதியில் ‘வைன் டிரேடா்’ எனும் சரக்குக் கப்பலில் வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டதில் 8 போ் மாயமாகினா்; 4 போ் மீட்கப்பட்டனா்.
இத்தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், ருமேனியா, பல்கேரியா நாடுகளின் கடற்பகுதிகளில் அண்மைக்காலமாக சரக்குக் கப்பல்களை குறிவைத்து தொடா்ச்சியாக ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.