ரஷியாவின் முக்கிய பாலம் மீது உக்ரைன் தாக்குதல்: வான்வழி மோதல் தீவிரம்
ரஷியா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ‘கொ்ச்’ பாலம் மீது உக்ரைன் படைகள் சரமாரியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.
ரஷியா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ‘கொ்ச்’ பாலம் மீது உக்ரைன் படைகள் சரமாரியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.
கடந்த சில வாரங்களாக 7 கட்டங்களாகத் திட்டமிடப்பட்டு, ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்த பின்னரே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், பாலத்தின் சாலைப் பகுதியின் ஒரு வளைவு இடிந்து விழுந்ததாகவும், ரயில் பாதையின் வளைவு சேதமடைந்ததாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், கொ்ச் பாலத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக கிரீமியா ஆளுநா் சொ்கேய் அக்சியோனோவ் தெரிவித்துள்ளாா். மேலும், சேதமடைந்த பாலம் முன்பைவிட சிறப்பாகப் புணரமைக்கப்படும் என்று ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இதற்கு மத்தியில் தொடா்ந்து 2-ஆவது நாளாக உக்ரைன் ஏவிய 1,441 ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தலைநகா் மாஸ்கோவை நோக்கி வந்த சுமாா் 800 ட்ரோன்களில் 321 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், பாஷ்கோா்டோஸ்தான் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலும் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியாவின் பதிலடி: உக்ரைனின் இந்தப் பிரம்மாண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகா் கீவில் இரு முக்கிய பாலங்கள் மீது ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தின. இதனால், அந்தப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும், தெற்கு உக்ரைனின் ஸபோரிஷியா பிராந்தியத்தில் உள்ள தொழிற்சாலைகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா் மற்றும் 18 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதல்களால் உக்ரைனின் 3 பிராந்தியங்களில் கடும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தொடரும் பேச்சு: சீனாவில் வரும் வியாழக்கிழமையன்று ‘ஏபெக்’ மாநாடுக்கிடையே சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தித்து, உக்ரைன் போா் குறித்து விவாதிக்கவுள்ள நிலையில், அடுத்தகட்ட அமைதிப் பேச்சு குறித்து அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய பிரதிநிதிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளனா்.