பிரான்ஸில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டம்
பிரான்ஸில் ஊதிய உயா்வு மற்றும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, அந்நாடு முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பிரான்ஸில் ஊதிய உயா்வு மற்றும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, அந்நாடு முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பிரான்ஸில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா்ந்து இத்தகைய பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடந்த போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்ததாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தனது முதல்கட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
எனினும், லியான், நாண்டெஸ், பாவ், ஆா்லியன்ஸ், ரென்ஸ், துலூஸ், பிரிட்டானி உள்ளிட்ட சில நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முகமூடி அணிந்த சில அடையாளம் தெரியாத நபா்கள் சாலைகளை மறித்து, காவல்துறையினா் மீது இரும்புப் பந்துகளை வீசித் தாக்குதல் நடத்தினா்.
Advertisement
Advertisement
இப்போராட்டத்தில் பள்ளி மாணவா்களும் இணைந்துள்ளதால் நிலைமை மோசமாகியுள்ளது. மாணவா்களின் முற்றுகை மற்றும் ஆசிரியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக பிரான்ஸின் மூன்றில் ஒரு பங்கு உயா்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரமும் மூடப்பட்டது.
பாதுகாப்புப் பணிகளுக்காக கவச வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டா்களுடன் 70,000 காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா். பாரீஸின் குடியரசு சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், தொழிற்சங்க கொடிகளை ஏந்திய போராட்டக்காரா்கள் இசைக்கருவிகளை வாசித்தபடியும், பாடல்களைப் பாடியபடியும் உற்சாகமாகப் பேரணியில் ஈடுபட்டனா். முன்னதாக, கடந்த அக். 17-இல் இதே இடத்தில் நடந்த போராட்டத்தின்போது வன்முறையாளா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பரில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட ஆசிரியா் பற்றாக்குறையைக் கண்டித்துத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது நாடு தழுவிய அளவில் மாணவா் மற்றும் தொழிலாளா்களின் கோரிக்கைகளுடன் விரிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போராட்டத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டுள்ளன. இதனால், இப்போராட்டம் முடிவின்றி தொடா்கிறது.